தொலைகாட்சி ஊடகம் உலகத்தையே என் வீட்டு வரவேற்பரைக்கு கொண்டு வருகிறதென்பேன். அதில் எது குப்பை எது மாணிக்கம் என நான் தீர்மானிப்பதைப் பொறுத்துத்தான் என் சீரழிவும் முன்னேற்றமும் அமைகிறது.
அரட்டைக் கச்சேரி என்றால் மிகவும் பிடித்த எனக்கு எங்கே என்ன தலைப்பில் சாட் ஷோ நடந்தாலும் பார்க்க பிடிக்கும்.
மலையாள மொழியை காதால் கேட்க பிடிக்கும் எனக்கு எந்த சானலில் மலையாளப் படம் எவர் நடித்திருந்தாலும் ப்ரச்சனையில்லாமல் பார்க்க பிடிக்கும் அம்மொழியை காதார கேட்க.
நியூஸ் பேப்பர் படிப்பதை விட அனைத்து செய்தி சானல்களிலும் அவர்கள் சொல்வதை கேட்க பிடிக்கும்.
ஷேர்மார்கெட் பற்றி மானிட்டரை முறைப்பதை காட்டிலும் டிவியை முறைப்பது இன்னமும் பிடிக்கும்.
அது மட்டுமல்ல யோகாசனம் முதல் சமையல் வரை தேவை படிகிறதை தெரிந்தெடுத்து காண பிடிக்கும்.
இன்னமும் பொழுது போகாவிடில் ஜோசியர்களும், நியூமராலஜிஸ்டுகளும், அருள்வாக்கு காரர்களும், அல்லேலூயா கூட்டமும் இந்த சமூகத்துக்காக சேவை செய்கிறார்களே அதையும் பார்த்து கிண்டலடிக்க பிடிக்கும்.
வெறும் பாட்டை டெடிகேட் பண்ண மட்டும்தான முடியும் தொலைகாட்சி பெட்டியில்? ஒத்தை குடும்பம் கூட விளங்காமல் போகிற சீரியல்களை விட்டு விட்டீர்களே, ஒட்ட கூத்தன்?
என்னை பொறுத்தவரை டிவி என் பெஸ்ட் ஃப்ரெண்ட்.
from stuart little