
பெரியார் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி தமிழகத்தை சார்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி, செயற்பாட்டாளர், சிந்தனையாளர் ஆவார். அவர் இறைமறுப்பு, பகுத்தறிவு, பெண்கள் முன்றேற்றம், கல்வி ஆகியவை சார்ந்து கொண்டிருந்ததே சிந்தனைகளே பெரியார் கொள்கைகள் அல்லது பெரியார் சிந்தனைகள் என்றழைக்கப்டுகின்றன.இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்மற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை.